கோவையில் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. இன்று முதல் கிராஸ்கட் வீதியில் செல்போன் கடைகள் அடைப்பு!
கோவை, காந்திபுரம் கிராஸ்கட் பகுதிகளில் உள்ள அனைத்து செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாக விற்பனை கடைகளும் இன்று முதல் அடைப்பு.
கோவையில் புதிதாய் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,052 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளர்.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடில் உள்ள அனைத்து செல்போன் கடைகளும் இன்று (29.7.2020) முதல் 2.8.2020 வரை 5 நாட்களுக்கு கடைகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, கோவை காந்திபுரம் கிராஸ்கட் பகுதிகளில் உள்ள அனைத்து செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாக விற்பனை கடைகளும் அடைக்கப்படவுள்ளது.