தந்தை – மகன் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!
தந்தை – மகன் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் இருவருக்கு கொரோனா உறுதி.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் சிபிஐ விசாரணை குழுவில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது, மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.