வேலூர் நிகழ்ச்சியில் முதல்வரை வரவேற்ற வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி!

Published by
Rebekal
வேலூர் கொரோனா தடுப்பு நிகழ்ச்சியில் முதல்வரை வரவேற்ற வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் வேலூர் மாவட்டத்தில் கொரானா தடுப்பு பணிகள் குறித்தும் வளர்ச்சி பணிகள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் அதன்பிறகு தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கார் மூலம் புறப்பட்டு உள்ளார். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக முதல்வர் வருவதை அறிந்த அதிமுகவினர் அவரை வரவேற்பதற்காக காத்திருந்துள்ளனர். எனவே அதை அறிந்த முதல்வர் காரை நிறுத்துமாறு கூறி கீழே இறங்கி அமைச்சர் நிலோபர் கபில் உட்பட பலர் போர்திய சால்வை பூங்கொத்து ஆகியவற்றை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் கூடியிருந்த அதிமுக கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு கைகொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மீண்டும் தர்மபுரி நோக்கி புறப்பட்டார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாணியம்பாடி வருவாய் ஆய்வாளர் மற்றும் அங்கிருந்த மற்றொரு கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Recent Posts

சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!

சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!

ஆப்கானிஸ்தான் :  அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…

6 minutes ago

LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!

சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…

40 minutes ago

சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…

59 minutes ago

காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!

சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…

2 hours ago

ஐரோப்பிய ஒன்றியம் நம்மளை ஏமாத்துறாங்க! இனிமே 25% வரி..டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…

2 hours ago

மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!

லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது  ரசிகர்களுக்கும் அணி…

3 hours ago