தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தண்டியுள்ளது. இன்று மட்டும் திருப்பூரில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று 1000-ஐ தண்டியுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து, 11 ஆக அதிகரித்துள்ளது. 50 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்ட 106 பேரில் அதிகபட்சமாக திருப்பூரில் 35 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியானது. ஏற்கனவே 25 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோவையில் இன்று மட்டும் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 97 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் அங்கு 119 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று சென்னையில் மேலும் 18 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு 199 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தான் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாகும் இருக்கிறது.
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி…
சென்னை -கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ,கார்த்திகை மாதத்தில் செய்யும் தானங்களின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : 'புஷ்பா-2 தி ரூல்' திரைப்படம் வரும் டிசம்பர்-5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. புஷ்பா படத்தின்…