தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா உறுதி.!

தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து, நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருகிறது. இதன் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே 11 பள்ளிகளில் 168 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 12 பேருக்கு பாதிப்பு உறுதியானது. புதிதாக பள்ளி மாணவர்கள் 12, கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கும்பகோணம் சரஸ்வதி பள்ளியில் 10, மாரியம்மன் வீதி அரசு பள்ளியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025