சென்னையில் ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா உறுதி
சென்னையில் தொடர்ந்து 9 ஆம் நாளாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,407 .
சென்னையில் ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் 13,310 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 13,808 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும், அம்மாவட்டத்தில் 279 பேர் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்து வருகிறது.