சென்னையில் 23,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு .!
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்தது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 224 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,11,256 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 11,817 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று புதிதாய் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,239 ஆக உயர்ந்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 286ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 17,527 ஆக அதிகரித்தது.மேலும் 15,413 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.