நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.அதன்படி,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,466 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.7,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மேலும்,தமிழகத்தை பொறுத்தவரை சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.
இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,இதனால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக நடைபெற்ற பொதுக்குழு மற்றும் ஈபிஎஸ் இல்லத்தில் ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தா நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…