தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.க்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.க்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 4-ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வைரசின் தாக்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி தீமுக எம்.எல்.ஏ.வான கணேசனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர், கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் கடலூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அவர், சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டு வருவதாகவும், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறவுள்ளதாகவும் அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் இதுவரை 13 எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin