தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,483 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,இன்று மட்டும் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமடைந்துள்ளது.இதனால்,கடந்த 24 மணிநேரத்தில் 35,483 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே,இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,42,344 பேராக அதிகரித்துள்ளது.
குறிப்பாக,சென்னையில் 5,169 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர்.மேலும்,தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 422 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
எனவே,இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20,468 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும் இன்று கொரோனாவிலிருந்து 25,196 பேர் குணமடைந்த நிலையில்,இதுவரையிலும் 15,27,733 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,தற்போது கொரோனா வார்டில் 2,94,143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…