#BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேருக்கு கொரோனா உறுதி

Published by
Venu

இன்று தமிழகத்தில் புதிதாக 5,175 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 5,175 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,73,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 6031 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை கொரோனாவில் இருந்து 2,14,815 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1044 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,05,004 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 40பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Published by
Venu

Recent Posts

“பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!

“பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!

சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…

2 minutes ago

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…

24 minutes ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…

47 minutes ago

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?.

சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி  குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…

51 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…

1 hour ago

சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பயணிகள் தவிப்பு.!

சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…

1 hour ago