#Breaking : சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி.!

சென்னையில், 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையின் முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையில் முக்கிய கட்டடங்கள், காய்கறி சந்தைகள், ராயபுரம், வியாசர்பாடி, கொண்டித்தோப்பு ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தார், அருகே வசித்து வந்த குடியிருப்புவாசிகள் ஆகியோருக்கு சோதனை நடத்தப்பட உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025