கொரோனா கட்டளை அறை (WAR ROOM) – மாவட்டங்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!
கொரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறைகளுக்கான (WAR ROOM) உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் கட்டளை மையம் (War room) அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து, அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தாரேஷ் அகமது, கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன், அழகுமீனா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு, படுக்கையின் எண்ணிக்கைகளை அறியலாம். இந்த நிலையில், கொரோனா கட்டளை அறைகளுக்கான உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மருந்து இருப்பு, படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை குறித்து அனைத்து மாவட்டங்களையும் WAR ROOM ஒருங்கிணைக்கும் என கூறப்பட்டுள்ளது.
அரியலூர்- 1077, 04329-228709, வாட்ஸ் அப்- 9499933828இல் தொடர்பு கொள்ளலாம். செங்கல்பட்டு- 044-27427412, 004-27427414 மற்றும் 1800-425-7088 & 1077 இல் தொடர்பு கொள்ளலாம். காஞ்சிபுரம்- 044-27237107, 044-27237207, மற்றும் கன்னியாகுமரி- 04652-220122, 04652-221077இல் தொடர்பு கொள்ளலாம் என்று 38 மாவட்டங்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்கான War Room அமைப்பு மாவட்டம் வாரியாக தொடர்பு எண்கள் வெளியீடு..!! pic.twitter.com/8hPyZP4z8B
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 14, 2021