கொரோனா காலர் டியூன் எல்லாம் ஓகேதான் ! மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை
கொரோனா காலர் டியூன் மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜியோ நிறுவனம் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காலர் டியூன் முறையை கையாண்டு வருகிறது.எந்தவொரு நெட்வொர்க்கிலிருந்தும் ஜியோக்கு அழைக்கும் போது ஒருவர் இருமுவது போன்று சத்தத்துடன் கொரோனா பற்றிய விழிப்புணர்வு அந்த காலர் டியூனில் ஆங்கிலத்தில் சொல்லப்படும்.
கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 9, 2020
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய சுகாதார துறைக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது அவரது பதிவில்,கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.