தடையை மீறி சுற்றுவோருக்கு கொரோனா தேர்வு – அசத்தும் கன்னியாகுமரி காவலர்கள்.!

Default Image

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் கூடுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இல்லாமல், வீடுகளை விட்டு வெளியே வருபவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி வித்தியாசமான முறையில் தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

அதாவது, தேவையில்லாமல் அரசு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு போலீசார் 10 கேள்விகள் கொண்ட தேர்வை ஒன்றை நடத்தி வருகின்றனர். கொரோனா குறித்த கேள்விகளுக்கு தவறான பதில் அளித்தால், ஒரு பதிலுக்கு 10 தோப்பு கரணம் போடவேண்டும் என்று கேள்வி தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தை மதிக்காமல் மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் நூதன தண்டனையை அளிக்கும் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுபோன்று பல இடங்களில் சாலையில் தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வித்தியாசமான முறையில் தண்டனைகளை வழங்கி வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்