சென்னையில் இன்று மட்டுமே 399 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.!
சென்னையில் இன்று மட்டுமே 399 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை 6009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கம் போல தலைநகர் சென்னையில் தான் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டுமே 399 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3043ஆக உயர்ந்துள்ளது.