#BREAKING: சென்னையில் 2000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.!
சென்னையில், இன்று மட்டுமே 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக உள்ளது. மேலும் இன்று கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 33 ஆகவும், 1485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. இன்று மட்டுமே 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை சென்னையில் மட்டும் 2,008 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.