#Breaking: ஒரே நாளில் 13 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. 78 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,51,487 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது. ஆயினும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இன்று 1,25,593 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 12 வயதிற்குட்பட்ட 514 சிறார்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,51,487 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 3,842 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 6-ம் நாளாக 6,000-ஐ கடந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. இன்று 8,078 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,43,044 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்ட 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,395 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 95,048 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.