தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா.! பாதிப்பு 485-ஆக உயர்வு.!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. நேற்றுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக இருந்த நிலையில் இன்று மட்டுமே 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 485ஆக உயர்ந்துள்ளது. இதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பாதிக்கப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவார்.
இதுவரை 90,541 பேர் வீட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 4,248 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 3,356 மாதிகள் நெகட்டிவ் என முடிவு தெரிந்துள்ளது. 407 மாதிரிகளின் முடிவுகள் வரவேண்டியுள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.