கொரோனா தடுப்பு -திமுக எம்பி ராசா ரூ.1 கோடி ஒதுக்கீடு
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.
எனவே கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, கொரோனா முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் மருத்துவ மேம்பாட்டுப் பணிகளுக்காக, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக திமுக எம்பி ஆ.ராசா அறிவித்துள்ளார்.
‘கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தியபடி, கொரோனா முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் மருத்துவ மேம்பாட்டுப் பணிகளுக்காக, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திரு. @dmk_raja MP அவர்கள் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு’#DMKagainstCorona pic.twitter.com/YDRlnS7eyE
— DMK (@arivalayam) March 29, 2020