இளைஞர்களை கதறவிட்ட வைரல் வீடியோ ! #Comeback கொடுத்த திருப்பூர் போலீஸ் !
ஊரடங்கில் சுற்றிக்கொண்டு இருந்த இளைஞர்கள மீண்டும் கதறவிட்ட திருப்பூர் போலீஸ்.
கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றாக மாறாமல் தடுக்க மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியா எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் துப்புரவுபணியாளர்கள் என அனைவரும் தங்களது குடும்பத்தை பிரிந்து அயராத பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இளைஞர்கள் ஊரடங்கை மீறி கேரம் போர்டு மற்றும் கிரிக்கெட் விளையாடுவது என சுற்றிக்கொண்டிருக்கின்றனர். இதனால் திருப்பூர் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறையினர் டுரோன் கேமராவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு மீறி சுற்றிக்கொண்டு இருந்த இளைஞர்கள் டுரோன் கேமராவை பார்த்து தெறித்து ஓடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
இந்நிலையில், ஊரடங்கை மீறி முகக்கவசம் அணியாமல் வண்டியில் வந்த மூன்று பேரை திருப்பூர் காவல்துறையினர் பிடித்து ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றினர். அந்த ஆம்புலன்ஸ் வண்டியில் கொரோனா நோயாளிகள் போல் வேடமிட்டு இருந்த நபரை கண்டு வண்டியின் ஜன்னல் வழியாக இளைஞர்கள் தப்பிக்க முயன்றனர். இந்த வீடியோவை காமெடியாக எடிட் செய்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.