கொரோனா விழிப்புணர்வு! திருநங்கைகளின் அட்டகாசமான செயல்!

கடந்த சில மாதங்களாக சீனாவில் பரவி வந்த உயிர்கொல்லி வைரஸான கொரோனா, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இது சீனாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.
இந்தியாவில், 200-க்கும் மேற்பட்டவர்கள், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து, திருநங்கைகளின் கலைக்குழு சார்பாக, சூளைமேடு போக்குவரத்து சிக்கனலில் வைத்து, கொரோனா பாதிப்பில் இருந்து எப்படி தப்பிப்பது என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், திருநங்கைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.