#BREAKING : அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி
மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு.இந்நிலையில் மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் தங்கமணி, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மியாட் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.