ராயபுரத்தில் 9ஆயிரத்தை நெருங்கும் கொரோனா.!

ராயபுரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,920ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில்1,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்தது மேலும் இதுவரை சென்னையில் 42,309 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 24,890 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்கள், 1054 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,920ஆக உயர்ந்துள்ளது. எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டல வாரியாக வெளியிட்டது மாநகராட்சி.
கோடம்பாக்கம்- 7,370 பேர் திருவிக நகர்-5,543 பேர், வளசரவாக்கம்- 3,212பேர் அண்ணாநகரில் 7,504 பேர் தண்டையார்பேட்டை 7,574 பேர், தேனாம்பேட்டை 7,630பேர், திருவொற்றியூர் 2,653 பெருக்கும், மணலி 1,222 பெருக்கும் அம்பத்தூர் 3,104 பெருக்கும் கொரோனா பாதிப்பு.
மேலும் மாதவரம் 2,211 பேர், ஆலந்தூர் 1,815, அடையாறு 4,274 பெருங்குடி 1,785 பேர் சோழிங்கநல்லூர் 1,458 பெருக்கும் கொரோனோ.