தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு..311 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 33,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 33,181பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15,98,216 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 6,247 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,38,391 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 311 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,670 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 21,317 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 13,61,204 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,66,812 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,51,17,215 ஆக உள்ளது. மேலும், தற்போது 2,19,342 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025