புதுச்சேரியில் கொரோனா…. பீதியில் மக்கள்…அரசு தீவிர நடவடிக்கை…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை தொடங்கி பல உயிர்களை காவு வாங்கிவரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலகமே ஈடுபட்டு வருகிறது. இதே போல், புதுச்சேரியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை, அரசு மார்பு நோய் மருத்துவமனை மற்றும் பிம்ஸ் மருத்துவமனையில் தலா ஒருவர் என 3 பேருக்கு தனிமை அறையில் சிகிச் சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.இந்த தகவல் புதுச்சேரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025