கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி…! துணிச்சலான முடிவெடுத்த ஆட்சியர்…!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் அதிகாரியை, தனது சொந்த காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மதுரை மாவட்ட ஆட்சியர்.
தமிழக சட்டமன்ற பணிகளை பார்வையிடுவதற்காக, மதுரையில், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தரம்வீர் யாதவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் காவல்துறையினரின் பணிகள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளித்து வந்தார்.
மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று பணியில் ஈடுபட்ட அவர், தனது கொரோனா அறிகுறி இருப்பது போல உணர்ந்துள்ளார். இதனையடுத்து, அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேகொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட கார் ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், கார் ஓட்டுநர் மற்றும் அவருடன் உடனிருந்தவர்கள் அவரை காரில் ஏற்றி செல்ல தயங்கிய நிலையில், இதுகுறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தன்னுடைய சொந்த காரில் அவரே அழைத்து சென்று மருத்துவம்மானையில் சேர்த்துள்ளார்.