கோயம்பேடு சந்தை மூலம் கடலூரில் மேலும் 68 பேருக்கு கொரோனா.!
கடலூரில், இன்று மட்டுமே 68 பேருக்கு கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், கோயம்படு சந்தை மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னையில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட் மூலமாக தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
அதில் அதிகமாக கடலூர் மாவட்டம் கோயம்பேடு சந்தை மூலமாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோயம்பேடு சந்தை மூலமாக 129 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது இன்று மட்டுமே 68 பேருக்கு கோயம்பேடு மூலம் கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனால், கோயம்படு சந்தை மூலம் கடலூரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. இதனால் கடலூரில் கொரோன பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 228ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர் வந்தவர்களில் 810 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுளள்து.