ஒரே நாளில் 1362 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ்.!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1362 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 23409 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42687 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 30 பேர் பலியாகிய நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1362 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 23409 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 18878 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பால் இந்தியா ஆறாவது இடத்திலிருந்து தற்போது நான்காவது இடத்திற்கு வந்தது,