நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் மேடையமைத்து பேச காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து எச்.ராஜா போலீசாரையும், நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
எச்.ராஜாவின் இந்த பேச்சு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், 2 மாதத்தில் போலீசார் விரைவில் விசாரணை முடித்து இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 3 ஆண்டாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது ஏப்ரல் 27-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, ஜூன் 17-ம் தேதி, நீதிபதி இளங்கோவன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி கூறுகையில், எச்.ராஜாவுக்கு எதிராக திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அந்த குற்றப்பத்திரிக்கை நகலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜூன் 29-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…