#TNAssembly:அதிமுக ஆட்சியில் ரூ.482 கோடி முறைகேடு;இவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

அதிமுக ஆட்சியில் ரூ.482 கோடி முறைகேடு நடந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 780 சங்கங்களில் ரூ.482 கோடி முறைகேடு நடந்துள்ளது எனவும்,முறைகேடுகள் குறித்து முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்,தமிழக கூட்டுறவு சங்கங்களில் ரூ.4816 கோடி வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன எனவும்,இதனைத் தொடர்ந்து,நகைக்கடன் தள்ளுபடி பயனாளர்களில் எஞ்சிய 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025