நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ள நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது.
அதன்படி,இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இதனைத் தொடர்ந்து,கோடநாடு எஸ்டேட் பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் என்பதன் அடிப்படையிலும், பங்களா மேலாளர் நடராஜன் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், சசிகலாவிடம் சில தினங்களுக்கு முன்னர் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை இரண்டு நாட்களாக தொடர் விசாரணை நடத்தியது.
மேலும்,விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில்,தற்போது சஜீவன் சகோதரர் சிபியிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும்,இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை ஜூன் மாதத்தில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்து வந்த குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் அவர்கள் தேனி மாவட்டத்திற்கு திடீரென பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக குன்னூர் டிஎஸ்பியாக சந்திர சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக சந்திர சேகர் பணியாற்றி வந்த நிலையில்,தற்போது குன்னூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனிடையே,கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிர்வாக காரணங்களுக்காக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சை பாபா பணியிடமாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக உதகை மாவட்ட அமர்வு நீதிபதியாக முருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…