குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு இதுதான் காரணமா?- வெளியான முக்கிய தகவல்!

Default Image

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனிடையே,எம்ஐ-17 ஹெலிகாப்டரின் பிளாக் பாக்ஸின் ஃப்ளைட் ரெக்கார்டை இந்திய விமானப் படையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு கண்டுபிடித்து மீட்டெடுத்தது.இதனைத் தொடர்ந்து,ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து ஏர் மார்ஷல் மகேந்திர சிங் தலைமையிலான குழு,முப்படை விசாரணையை நடத்தி வருகிறது.

இந்நிலையில்,குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.ஹெலிகாப்டர் மேகக் கூட்டத்தில் நுழைந்ததால் அதனை இயக்கியவரால் இருளில் பாதையை கணிக்க முடியாமல் போயிருக்கலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான ஆய்வறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,மன்வேந்திர சிங் குழு இந்த அறிக்கையை சட்ட ரீதியாக ஆய்வு செய்து விரைவில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,முப்படைகளின் கூட்டு ஆய்வறிக்கை சரிபார்க்கப்பட்ட பிறகு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Yashasvi Jaiswal
Encounter tn
rohit sharma about mi
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal