வீட்டில் உபயோகிக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் உள்ள விலைக்கேற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் டீசல், பெட்ரோலுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அண்மையில் கூட பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரு முறை கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்தது.
தற்பொழுதும் சென்னையில் 810 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர், மீண்டும் பிப்ரவரி மாதம் விலை அதிகரிப்பால் 835 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் பின் பத்து ரூபாய் குறைக்கப்பட்டு மீண்டும் 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் 25 ரூபாய் அதிகரித்து 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு 850 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…