குளிரூட்டி வசதி கொண்டவையாக மாற்றப்படுவது கண்டிக்கத்தக்கது..ராமதாஸ்.!
ரயில்களில் பயணம் செய்யும் ஏழைகளின் உரிமையைப் பறிக்கும் செயலாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
மணிக்கு 130 கி.மீ.க்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் ரயில்களில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், மணிக்கு 130 கி.மீ.க்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் ரயில்களில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என ரயில்வே துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ரயில்களில் பயணம் செய்யும் ஏழைகளின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.!
அனைத்து ரயில்களிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் குறைந்தது 50% சாதாரண வகுப்புப் பெட்டிகள் இடம் பெற வேண்டும். அதேபோல், முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தொடர வேண்டும். ரயில்வே துறை ஏழைகளின் தோழனாகத் தொடர வேண்டும்..! என தெரிவித்துள்ளார்.
அனைத்துத் தொடர்வண்டிகளிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் குறைந்தது 50% பெட்டிகள் சாதாரண வகுப்பு பெட்டிகள் இடம் பெற வேண்டும். அதேபோல் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தொடர வேண்டும். தொடர்வண்டித்துறை ஏழைகளின் தோழனாக தொடர வேண்டும்!@PiyushGoyalOffc @RailwaySeva
— Dr S RAMADOSS (@drramadoss) October 12, 2020