அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து, மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம் தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால், இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த ஜனவரி 31-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், சிபிஐ விசாரிக்கத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து சிபிஐ விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில், அரியலூர் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் அனுப்பியது. அதில், அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை. மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…