ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு எதிராக பல இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தியது.பாஜகவை தவிர்த்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.ஆனால் இந்த விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் ,வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
எனவே பெரியார் பற்றி அவதூறு கருத்தை தெரிவித்ததாக திராவிடர் விடுதலை கழகம் சார்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் அறிவித்தது.அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையில் வழக்கினை தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…