மழை நீரில் ஷூ நனையாமல் இருக்க நாற்காலிகள் மீது நடந்து சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன்….!
மழை நீரில் ஷூ நனையாமல் இருக்க தொண்டர்களின் உதவியுடன் நாற்காலிகள் மீது திருமாவளவன் நடந்து சென்றது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையின் பல பகுதிகளிலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியான வேளச்சேரி பகுதியிலும் பலரது வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது .
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் குடியிருப்புக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. எனவே திருமாவளவன் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறும் பொழுது தனது ஷூ நனைந்து விடக்கூடாது என்பதற்காக அவரது தொண்டர்கள் உதவியுடன் நாற்காலி மீது நடந்து வந்து காரில் ஏறி சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி, தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,
தொல் தோழர் சமூக நீதியை காக்கும் போது ????♂️#திருமாவளவன் #thiruma #Socialjustice pic.twitter.com/zonMMPrE9N
— அகத்தியன் (@riverinerabbit) November 29, 2021