தடுப்பூசி குறித்த சர்ச்சையான கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால்,சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார்.
இந்த நிலையில் விவேக் மரணம் குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,தடுப்பூசி போட்டுக் கொண்ட காரணத்தினால் தான் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் கூறினார்.
இதனையடுத்து,பிரதமர் மக்கள் நல திட்டங்கள் விளம்பர அமைப்பின் செயலாளர் சோமு ராஜசேகரன் என்பவர்,நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது,உயிருக்கு ஆபத்தான தொற்று பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல்,கலகம் செய்ய தூண்டிவிடுதல்,பேரிடர் மேலாண்மை சட்டம்,தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…