டீக்கடைகள், உணவகங்களுக்கு கட்டுப்பாடு – தமிழக அரசு அதிரடி.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள டீக்கடைகள் மற்றும் உணவகங்களுக்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி டீக்கடைகளில் பயன்படுத்தும் டம்ளர்கள் சுத்தமாகவும், வெந்நீர் மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்திருக்க வேண்டும் என்றும் கடையில் இருப்பவர்கள் சுத்தமாக கைகளை கழுவி விட்டு டி போடவேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதுபோன்று உணவகங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றும் பொதுமக்களிடையே கைகளை கழுவி விட்டு சாப்பிடுமாறு வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேபோல் உணவுகளை தயார் செய்யும் போது தயாரிப்பவர்கள் அதற்கான கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும் கைகளை சுத்தம் செய்த பின்னரே தயார் செய்ய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தினந்தோறும் தேநீர் அருந்துவது வழக்கமாக தமிழகத்தில் கடைபிடித்து வருவதால், இதுபோன்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.