#BREAKING: தமிழகத்தில் அனைத்து கடைகளுக்கும் கட்டுப்பாடு அறிவிப்பு..!
நாளை மறுநாள் முதல் அனைத்து கடைகளு மறு உத்தரவு வரும் வரை இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
கொரோனா காரணமாக நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்ப்படுப்படுகிறது.
மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையெடுத்து, தமிழகத்தில் தேநீர் கடைகள், உணவு விடுதிகள், வணிக வளாகங்கள், காய்கறி, பலசரக்கு உள்ளிட்டு அனைத்து கடைகளுக்கும் நாளை மறுநாள் முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.