அவை மரபுக்கு மாறாக ஆளுநரின் உரை இருந்தது – அமைச்சர் தங்கம் தென்னரசு
சட்டப்பேரவை கூட்டத்திற்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பேரவையில் தான் படிக்கும் உரைக்கு ஆளுநர் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கடந்த 7-ஆம் தேதி அவர் ஒப்புதல் வழங்கிய உரைக்கு பிறகு அவர் படித்த அறிக்கை ஏற்க முடியாது. சமூக நீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து உள்ளார். தேசிய கீதத்தை இசைப்பதற்கு முன்பே ஆளுநர் வெளியேறியது தவறான செயல். அதிமுகவினரும் தேசிய கீதம் இசைப்பதற்கு முன் வெளியேறியது அநாகரிகமான செயல் என தெரிவித்துள்ளார்.
மேலும், உரையின் பத்தியில் மாறுபட்ட கருத்து இருந்தால் ஆளுநர் அதை முன்பே கூறியிருக்கலாமே? தான் ஒப்புதல் கொடுத்த பத்திகளை ஆளுநர் ஏன் படிக்காமல் விட்டார் என்பதே இங்கே கேள்வி? என தெரிவித்துள்ளார்.