ரூ.6,100 கோடிக்கு ஒப்பந்தங்கள்;14,700 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் அறிவிப்பு!

Published by
Edison

சென்னை:கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத் தான் இருந்தது என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது.இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கு தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார்.

அபுதாபி பயணம்:

அதனை தொடர்ந்து,பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலீட்டாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பல ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.பின்னர்,துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றார்.

பணத்தை எடுத்து வந்ததாக தவறாக பரப்புரை:

அங்கு நடைபெற்ற தமிழ் சங்க நிகழ்ச்சியில் தமிழ் மக்களிடையே பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருபுறம் கடந்தகால களஆய்வு, மறுபுறம் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுகிறேன். தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக உழைத்து கொண்டிருக்கேன்.நான் துபாய்க்கு பணத்தை எடுத்து வந்ததாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது; நான் பணத்தை எடுத்து வரவில்லை, தமிழர்களின் மனங்களைத்தான் எடுத்து வந்தேன் என தெரிவித்துள்ளார்.

6 முக்கிய ஒப்பந்தங்கள்:

இதனிடையே,முதல்வர் துபாய் பயணத்தில் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.அதன்படி,

  1. இரும்பு தளவாடங்கள் சார்ந்த நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் – ரூ.1100 கோடி
  2. ஜவுளிதுறை சார்ந்த WHITE HOUSE நிறுவனத்துடன் – ரூ.500 கோடி
  3. உணவு துறை சார்ந்த TRANSVEL குழுமத்தோடு ஒப்பந்தம்.
  4. மருத்துவத்துறை AASTAR TM Health care – 500 கோடி
  5. சரக்கு போக்குவரத்து நிறுவனத்தை சார்ந்த SHERAF நிறுவனத்துடன் – 500கோடி ரூபாய்
  6. உணவு பதப்படுத்தக்கூடிய தொழில் மற்றும் கட்டுமான துறையை சார்ந்த LULU நிறுவனத்தோடு – 3500கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சென்னை வருகை:

இந்நிலையில்,வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவர்களை அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

14,700 பேருக்கு வேலைவாய்ப்பு:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கூறியதாவது: “தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாகத் துபாய்,அபுதாபி போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன்.இந்த பயணத்தின்மூலம்,6 மிக முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப்போகிறது.

அதிமுக ஆட்சி,வெறும் காகித கப்பல்:

ஆனால்,கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத் தான் இருந்தது.ஆனால்,நாங்கள் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே தமிழகத்தில் தொழில் தொடங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப் போகிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…

8 hours ago

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…

8 hours ago

பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

9 hours ago

“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…

9 hours ago

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…

9 hours ago

H1B விசா கொள்கையில் மாற்றம் வருமா? கலகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.!

நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…

10 hours ago