Chennai Metro : சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழு வீச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 2026க்குள் முடித்து 2027ஆம் ஆண்டு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முனைப்பில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ், 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதவரம் முதல் சிப்காட் வரையில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையில் என மொத்தம் 116கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 119 மெட்ரோ நிலையங்கள் அமைய உள்ளதாக குறிப்பிப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளி வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மாதவரம் முதல் தரமணி இடையில் உள்ள தூர பாதை பூமிக்கடியில் சுரங்கப்பாதையிலும், சிப்காட் கடைசி நிலையம் பகுதியில் மேம்பாலம் வழியாகவும் மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளது என்றும்,
கோயம்பேடு, திருமங்கலம், மைலாப்பூர் ஆகிய பகுதியில் கட்டிடத்திற்குள் மெட்ரோ ரயில் புகுந்து செல்லும்படி அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முதற்கட்டமாக திருமங்கலம் பகுதியில் மேம்பாலம், அடுக்குமாடி கட்டிடம் அமைக்க அப்பகுதியில் உள்ள 3 வீடுகள் கொண்ட 450 மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருமங்கலம் பகுதியில் கட்டிடத்திற்குள் புகுந்து செல்லும்படி அமைக்கப்பட உள்ள கட்டிடத்தில் 3வது மாடியில் ரயில் செல்லும் என்றும் 4வது மாடியில் ரயில் நிலையம் அமையும் என்றும், இதில் மொத்தம் 12 மாடிகள் கட்டப்பட உள்ளது என்றும், அந்த 12 மாடிகளில் பல்வேறு அங்காடிகள் கொண்ட ஷாப்பிங் மால் கட்டப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…