அதிமுக-தேமுதிக இடையே தொடரும் இழுபறி…! இன்று அவசர ஆலோசனை…!
அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிற நிலையில், தேமுதிக சார்பில், இன்று அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
தேமுதிக, அதிமுகவிடம் 41தொகுதிகள் கேட்ட்டன. ஆனால் அதிமுக இதற்க்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அடுத்தகட்டமாக 23 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால், அதிமுக 15 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. இதனையடுத்து, அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிற நிலையில், தேமுதிக சார்பில், இன்று அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது.