தொடர் இழுபறி., இன்று இரவுக்குள் திமுக – மதிமுக தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம்.!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் மதிமுக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து தொகுதி பணங்கிடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வந்தது.
இம்மாதம் 12ம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான நாள் தொடங்குகிறது. அதற்குள்ளாக தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய அவசியம் பிரதான கட்சிகளுக்கு உள்ளது. இந்நிலையில் இன்று இரவுக்குள் திமுகவுடன் தொகுதி பங்கீட்டை மதிமுக இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக-மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், ஆரம்பத்தில் 4 இடங்கள் வரை ஒதுக்க திமுகமுன்வந்திருந்தது. தற்போது, 5முதல் 6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று கூறப்படுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகள் அண்ணா அறிவாலயத்தில் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025