தொடரும் ஐடி ரெயிடு…! சென்னையில் நகைக்கடையில் ரூ.1.50 கோடி பறிமுதல்…!
சென்னையில் நகைக்கடையில், பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.1.50 கோடியை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் பிரபலங்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள், நகை கடைகள், ஜவுளி மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை சவுக்கார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஸ்ரீ கே.ஜே.நகைக்கடையில், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.1.50 கோடியை பறிமுதல் செய்துள்ளனர்.