தொடரும் யானைகள் உயிரிழப்பு : மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தொடரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் மற்றும் திருச்சியை சேர்ந்த நித்திய சௌமியா யானைகள் கொடூரமாக வேட்டையாடுதல் மற்றும் யானைகள் உயிரிழப்பு குறித்து குறித்த வழக்குகளை விசாரிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கடந்த ஐந்து ஆண்டுகளில் 13,000 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் 60 யானைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு உயிர் இழந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதிகள், ரயில்வே சொத்துக்களை பாதுகாக்க தடுப்பு சுவர்களை எழுப்புவதால் வேறு வழியில்லாமல் யானைகள் தண்டவாளங்களை கடக்கும் தங்கும் சூழ்நிலை ஏற்படுவதாகவும், யானைக்க உயிர் இழப்பை தடுக்க எவ்வளவு பணம் செலவழித்தும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. யானைகள் பலியாவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு மற்றும் தெற்கு ரயில்வே தெளிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.