தொடரும் ஊரடங்கு உத்தரவு! இதுவரை குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் பதிவு!
ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக இதுவரை 616 புகார்கள் பெறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மே-31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக இதுவரை 616 புகார்கள் பெறப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடும்ப வன்முறையை தடுக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையி ல், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறையை தடுக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.