தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்..! மேலும் ஒருவர் தற்கொலை..!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில், வினோத்குமார் என்பவர் தற்கொலை
இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு அடிமையாகி உள்ளனர். பொழுதுபோக்கிற்காக இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள், காலப்போக்கில் இதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
இந்த விளையாட்டால், தங்களது உழைப்பையும், பணத்தையும் இழப்பதோடு, இறுதியில் தங்களது உயிரையே மாய்த்து கொள்கின்றனர். இதனால், அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
இந்த நிலையில், சென்னை தாம்பரத்தை சேர்ந்த மருந்து நிறுவன பிரதிநிதி வினோத்குமார். இவர் மாடம்பாக்கம் கணபதி காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை
இந்த நிலையில் இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளார். வினோத்குமார் பல லோன் ஆப்களில் 20 லட்சம் வரை கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார். கடன் கொடுத்த லோன் ஆப்கள் தரப்பில் வந்த நெருக்கடி மற்றும் பணத்தை இழந்த வேதனையில் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.